குமரி மாவட்டத்தில் நாளை கனி காணும் நிகழ்ச்சி: காய், கனிகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்.. விற்பனை அமோகம்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி காய் கனிகளின் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில்கள் மற்றும் வீடுகளில் கனி காணும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாவட்டத்தில் காய் கனிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிகாலையிலேயே ஏராளமானோர் கடைகளுக்கு வந்து காய், கனிகளை வாங்கி சென்றனர். இதனால் மாம்பழம், திராட்சை, முந்திரி, அண்ணாசி, கொய்யா உட்பட பல்வேறு பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு மாம்பழம் சீசன் பின்தங்கியுள்ள போதிலும் மாம்பழங்கள் ஏராளமாக வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். முந்திரி பழங்களின் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர். இதனால் சந்தையில் முந்திரி பழம் 25 ரூபாய் வரை விற்பனையாவதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பழங்களின் விலை அதிகமாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி