ரூ.50 கோடி கேட்டு குமாரசாமி மிரட்டினார்: தொழிலதிபர் போலீசில் புகார்

பெங்களூரு: பெங்களூரு தாசரஹள்ளியில் வசித்துவருபவர் தொழிலதிபர் விஜய் டாடா. இவர் 2018 முதல் மஜத கட்சியிலும் இருந்துவருகிறார். இந்நிலையில், சென்னபட்னா இடைத்தேர்தல் செலவுக்கு தன்னிடம் ரூ.50 கோடி தரும்படி மிரட்டியதாக குமாரசாமி மீது அவர் பெங்களூரு அமிர்தஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஜய் டாடா போலீசில் அளித்த புகாரில், ‘ முன்னாள் மேலவை உறுப்பினர் ரமேஷ் கவுடா கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இரவு 10 மணிக்கு என் வீட்டிற்கு வந்தார். சென்னபட்னா இடைத்தேர்தலில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கு சீட் கிடைப்பது உறுதியாகிவிட்டது என்று கூறினார். அவரே குமாரசாமிக்கு போன் செய்து என்னிடம் கொடுத்தார். அப்போது, தேர்தல் செலவுக்கு ரூ.50 கோடி தருமாறு குமாரசாமி என்னிடம் கேட்டார். அவ்வளவு பணம் இல்லை என்று நான் கூறியதற்கு, என்னை குமாரசாமி மிரட்டினார். கோவில் மற்றும் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று, அதற்கு தனியாக ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர் என்று விஜய் டாடா புகார் அளித்தார். தொழிலதிபர் விஜய் டாடாவின் புகாரைப் பெற்று அமிர்தஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related posts

சிகிச்சை ஓவர், மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் உற்சாகம்..!

அக்.04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி