இன்னும் ஒரு வாரத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கிரீடம் தயாரிக்கும் பணி திருச்செந்தூர் பகுதியில் தீவிரம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இன்னும் ஒருவார காலத்தில் விமர்சியுடன் தொடங்க இருக்கும் நிலையில் பக்தர்களுக்கான கிரீடங்களை வடிவமைப்பதற்கு உரிய ஆட்கள் இல்லாமல் அத்தொழில் அழியும் நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. காளி, அம்மன், முருகன், சிவன் உட்பட பல்வேறு வேடமிட்டு விழாவுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை காண வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்நிலையில், பக்தர்களுக்கு காளி அம்மன், சுடுகாட்டு காளி, கருங்காலி உள்ளிட்ட விதவிதமான கிரீடங்களை தயாரிக்கும் பணி திருச்செந்தூர் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. திருவிழாவின் சிகரம் நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் அக்டோபர் 12ம் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நாடைபெற உள்ளது. இந்நிலையில், பக்தர்களுக்கு தேவையான கிரீடங்களை தயார் செய்வதற்கு உரிய ஆட்கள் இல்லாமல் அத்தொழில் அழியும் நிலையில் இருப்பதாகவும் அதை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றி ஹெல்மெட் அணிந்து இருந்தால் ஊக்கப்பரிசு

திருமணம் செய்வதாக ₹2 கோடி மோசடி பிரபல யூடியூபர் மீது போலீசில் இளம்பெண் பலாத்கார புகார்

உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே ஏழுமலையானை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தரிசிக்க வேண்டும்