சட்டமன்ற கமிட்டி தலைவர் பதவியில் இருந்து மணிப்பூரில் 3 குக்கி எம்எல்ஏக்கள் நீக்கம்

இம்பால்: மணிப்பூரில் சட்டபேரவையில் கமிட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து 3 குக்கி சோ பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவையில் 3 கமிட்டிகளுக்கான புதிய தலைவரை சட்டப்பேரவை சபாநாயகர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பொது நிறுவனங்கள் கமிட்டியின் தலைவராக மாயாங்கிலாம்பாம் ரமேஷ்வோர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக தலைவராக சூரசந்த்பூர் எம்எல்ஏ எல்எம் கவுட்டே இருந்து வந்தார்.

இதேபோல் அரசின் உறுதிமொழி குழு தலைவராக கமிட்டியின் தலைவராக என்பிஎப் எம்எல்ஏ லோசி டிகோ மற்றும் சட்டப்பேரவை நூலக கமிட்டி தலைவராக லாம்லாய் தொகுதி பாஜ எம்எல்ஏ ஐபோம்சா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த பிரிவு தலைவர்களாக இருந்த சைது தொகுதி சுயேட்சை எம்எல்ஏ ஹோகோலெட் கிப்ஜென் மற்றும் தான்லான் தொகுதி பாஜ எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட 3 பேரும் குக்கி சோ பிரிவை சேர்ந்தவர்கள்.

* மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சண்டை; கிராம தன்னார்வலர் பலி
மணிப்பூரில் கலவரம் குறைந்து மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காங்போங்பி, தெங்னவுபால், சுராசந்த்பூர் ஆகிய கிராமங்களில் அதிகம் வசிக்கும் பழங்குடியின மக்கள் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றுள்ளதுடன், பதுங்கு குழிகள் அமைத்து தங்கள் கிராமங்களை பாதுகாத்து வருகின்றனர்.

இவர்கள் கிராம தன்னார்வலர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை காங்போங்பி மாவட்டத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பதுங்கு குழியில் இருந்த கும்மின்தாங் என்ற கிராம தன்னார்வலர் உயிரிழந்தார். இதனால் காங்போங்பி, பிஷ்னுபூர் மாவட்ட கிராமங்கள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது