குடியாத்தம் பகுதிகளில் 3 பேருக்கு டெங்கு எதிரொலி காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்

*மருத்துவ அலுவலர் அறிவுரை

குடியாத்தம் : குடியாத்தம் பகுதிகளில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு எதிரொலியால், பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்தவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
குடியாத்தம் ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்திரா நகர் பகுதியில் உள்ள தெருக்களில் சுகாதாரத்துறை சார்பில் ெடங்கு கொசுப்புழுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.விமல்குமார் கூறியதாவது:

தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளதால் கொசுக்கள் மூலம் நோய் தொற்று பரவ தொடங்கியுள்ளது.குடியாத்தம் ஒன்றியத்தில் இந்திரா நகர், பீமாபுரம், கீழ்சுந்தரகுட்டை உள்ளிட்ட கிராமங்களில் தலா ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், நோய் தொற்றுகளை தடுக்க பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குடிநீர் உள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வீடு மற்றும் சுற்றுப்பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற, பயன்படாத பொருட்களை வீடுகள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும்குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். கொசு ஒழிப்பு, கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலுக்கான அறிகுறி ஏதாவது இருந்தால் தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது குடியாத்தம் நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்