கேடிஎம் பைக்குகள்

கேடிஎம் நிறுவனம் ஆர்சி390, ஆர்சி200 மற்றும் ஆர்சி125 என மூன்று மோட்டார் சைக்கிள்களை புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது. ஆர்சி 390 பைக்கில் 373 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 42.9 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், அசிஸ்ட், குவிக் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது. மேலும், ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், சைடு ஸ்டாண்ட் சென்சார், எல்இடி ஹெட் லாம்ப், டிஎப்டி ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. புதிய நீலம் மற்றும் ஆரஞ்ச், கருப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ணங்களில் வெளிவந்துள்ளது. இதுபோல், கேடிஎம்200 பைக்கில் சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரையும், 19.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய எல்சிடி டாஷ் டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஆர்சி வரிசையில் கேடிஎம் ஆர்சி125 மோட்டார் சைக்கிலும் புதிய கருப்பு மற்றும் ஆரஞ்ச், நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்ச் இணைந்த வண்ணத்தில் வெளிவந்துள்ளது. இதில் 125 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 14.5 பிஎஸ் பவரையும், 12 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டூயல் ஏபிஎஸ், புதிய எல்சிடி டாஷ் டிஸ்பிளே உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக, ஆர்சி390 சுமார் ரூ.3,18,173, ஆர்சி 200 சுமார் ரூ.2,17,696 மற்றும் ஆர்சி 125 ரூ.1,89,542 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு