கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் போதை ஊசி செலுத்திய ஊழியருக்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: திருவல்லிக்கேணி கஜபதி தெருவை சேர்ந்தவர் கிஷோர் (24). இவர், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று சுடுகாட்டில் தனது வலது கையில் போதை ஊசியை செலுத்திக் கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். வெகு நேரம் கிஷோர் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு வந்து பார்த்த போது, கிஷோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கிஷோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகளவு வீரியம் கொண்ட போதை மருந்து உடலில் செலுத்தியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிந்து, மயான ஒப்பந்த ஊழியர் கிஷோருக்கு போதை ஊசி விற்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

காசா மருத்துவமனை இயக்குனர் 7 மாதங்களுக்கு பின் விடுதலை: இஸ்ரேல் ராணுவம் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ஒன்றிய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

செல்வப்பெருந்தகை கிண்டல் அமெரிக்காவின் அதிபராக அண்ணாமலை முயற்சி