கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தலில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் 100 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் பொறுப்பு அமைச்சர் கைத்தறி மற்றும் நெசவுத்துறை காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை கழக செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, துணை தலைமை செயலாளர்கள் தாயகம் கவி, ஆஸ்டின் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர், மாதவரம் சுதர்சனம், கோவிந்தராஜ், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ளும் பணிகள், அவற்றை எவ்வாறு ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு பொள்ளாச்சி, கோவை, மாலை 3 மணிக்கு நீலகிரி, திருப்பூர் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு