கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அணை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அணை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சூளகிரி சின்னாறு அணையிலிருந்து பாசனத்திற்கு 07.07.2023 முதல் 04.11.2023 வரையிலான 120 நாட்களுக்கு நாள் ஒன்றிற்கு 8 மணி நேரம் வினாடிக்கு 17 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 871 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

குடகனாறு அணை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குடகனாறு அணையிலிருந்து, வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மற்றும் ஆற்றின் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கும் குடகனாறு அணைக்கு கீழ் ஆற்றில் அமைந்துள்ள அணைக்கட்டின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், 07.07.2023 முதல் 09.07.2023 வரை 3 நாட்களுக்கு 169.06 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 9000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது