கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி வன்கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு ஆலோசனை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பருதூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 மாணவிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொறுப்பாளர் சிவராமன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த குற்றம் தெரிந்தும் அதை மறைக்க முயற்சி செய்த பள்ளியின் முதல்வர், தாளாளர் உட்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்கள் பெற்றோரை கலந்து அவர்களின் நலம் காத்திட சமூக நலத்துறை செயலாளர் ஜெய்ஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அதன்படி இந்த குழுவானது இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பவம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பிறகு சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், சமூக பாதுகாப்பு ஆணையர், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு