கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாம் பாலியல் வழக்கில் கைதான தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஜாமின் தர காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமீன் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடக்கும்போது ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுமார் 43 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம்