கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை வீழ்ச்சி

அண்ணாநகர்: கர்நாடக மாநிலம் மற்றும் ஒசூர் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனைத்து பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும் ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.400க்கும், கனகாம்பரம் 600க்கும், அரளி பூ ரூ.100க்கும், சாமந்தி ரூ.160க்கும், சம்பங்கி ரூ.80க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.70க்கும், பன்னீர் ரோஸ் ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘ஒசூர் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அனைத்து பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது. வரும் வியாழன், வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் பூக்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,’ என்றார்.

Related posts

நடிகை அதிதி ராவுடன் நடிகர் சித்தார்த் திருமணம்

செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி

எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு