கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

சென்னை: வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் 30 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் இன்று ரூ.50-க்கு விற்பனையாகிறது. ரூ.20-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.50-க்கும் அவரை ரூ.35-ல் இருந்து ரூ.60-ஆக விலை உயர்ந்துள்ளது. முருங்கைக்காய் ரூ.80-ல் இருந்து ரூ.130-ஆகவும் முள்ளங்கி ரூ.25-ல் இருந்து ரூ.40-ஆகவும் விலை அதிகரித்துள்ளது. பச்சை மிளகாய் ரூ.25-ல் இருந்து ரூ.40-ஆக விலை உயர்வு; ரூ.30-க்கு விற்கப்பட்ட குடை மிளகாய் ரூ.60-க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தையில் இன்னும் 2 வாரங்களுக்கு விலை உயர்வு நீடிக்கும் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி