கோயம்பேட்டில் பூக்களின் விலை கடும் சரிவு: 1 கிலோ சாமந்தி ரூ.30க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.300, ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ரூ.200, கனகாம்பரம் ரூ.400, சாமந்தி, பன்னீர் ரோஸ் ரூ.30, சம்பங்கி ரூ.80, சாக்லேட் ரோஸ் ரூ.80, அரளி பூ ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும் போது, ‘‘வரத்து அதிகரிப்பால், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால், குறைந்த விலையில் வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்தனர். ஆனாலும், சென்னை புறநகர் சில்லரை வியாபாரிகள் குறைந்த அளவே வந்தனர். வியாபாரம் இல்லாமல் சாமந்தி மற்றும் அரளி பூக்களை குப்பைத் தொட்டியில் கொட்டியதால், வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் வர இருப்பதால் மீண்டும் பூக்களின் விலை உயரும்’’ என தெரிவித்தார்.

Related posts

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்