கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது

மதுரவாயல்: வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 650 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்துகொண்டிருந்தது. ஆனால் வரத்து குறைவால் தொடர்ந்து 2 மாதங்களாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 600 வாகனங்களில் இருந்து 5,500 டன் காய்கறிகள் வந்துள்ளதால் காய்கறிகள் விலை நாளுக்குநாள் விலை உயர்ந்து வருகிறது.

தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.90க்கும், கேரட், பீட்ருட் ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.100க்கும், காராமணி ரூ.60க்கும், சேனைக்கிழங்கு ரூ.68க்கும், முருங்கைக்காய் ரூ.100க்கும், காலிபிளவர், பீரக்கன்காய் ரூ.50க்கும், பச்சை மிளகாய் ரூ.45க்கும், பட்டாணி ரூ.200க்கும், இஞ்சி ரூ.150க்கும், பூண்டு ரூ.350க்கும், அவரைக்காய் ரூ.75க்கும், எலுமிச்சை பழம் ரூ.120க்கும், வண்ண குடமிளகாய் ரூ.160க்கும், தக்காளி, சவ்சவ், முள்ளங்கி, வெண்டைக்காய், கத்தரிக்காய், நூக்கல் ரூ.35க்கும், கோவக்காய், கொத்தவரங்காய், புடலங்காய் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related posts

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து கடலில் குளித்த திருப்பூரைச் சேர்ந்த முதியவர் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு

பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற முடிவு!