அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு பழம் மார்க்கெட் சுத்தம் செய்யும் பணி தீவிரம்


அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பழம் மார்க்கெட் வளாகத்தை சுத்தம் செய்யவேண்டும் என்று கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டார். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக சார்பில், பழ மார்க்கெட்டை ஒவ்வொரு பிளாக்காக பிரித்து சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது; கோயம்பேடு பழ மார்க்கெட்டை சமீபகாலமாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது பழ மார்க்கெட் முழுவதும் கரை, கரையாக காணப்படுவதாகவும் உடனடியாக சுத்தம் செய்யவேண்டும் என்றும் அங்காடி நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி அங்காடி நிர்வாகம் சார்பில், கோயம்பேடு பழ மார்க்கெட் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பழ மார்க்கெட் முழுவதும் சுத்தமாக காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். வாழைக்காய் மார்க்கெட்டில் அதிகமாக கரைகள் காணப்படுவதால் அந்த கரைகளை சுத்தம் செய்வது கடினமாக உள்ளது. இருப்பினும் சுத்தம்செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பழ மார்க்கெட் பகுதியை சுத்தம் செய்துவரும் அங்காடி நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள். இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது