கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவால் காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரிப்பு: பீன்ஸ் ரூ.230, முள்ளங்கி ரூ.50, வெண்டைக்காய் ரூ.60-க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் சுமார் 7 ஆயிரம் முதல் 8 டன் காய்கறிகள் வரும் நிலையில் கோடை வெயில் மற்றும் மழை பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக 5ஆயிரம் டன் காய்கறிகள் மட்டுமே கொண்டுவரபடுகின்றன. வரத்து குறைவால் காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 10 முதல் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15 க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி இந்த வாரம் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பீன்ஸ் ரூ.170 ரூபாயிலிருந்து ரூ.230 ரூபாய் ஆகவும் எலுமிச்சை ரூ.110லிருந்து ரூ.130க்கும் கொத்தமல்லி 1 கட்டு ரூ.20 ஆகவும் அதிகரித்துள்ளது.

காய்கறி விலை உயர்வு கவலை அளிப்பதாக இல்லத்தரசிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை உயர்வு அடுத்தடுத்த 10 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாக கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.2க்கு விற்ற சுரைக்காய் ரூ.20க்கும் ரூ.8க்கு விற்ற பூசணிக்காய் ரூ.14க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் மற்றும் மழை பாதிப்பு காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் மற்றும் மழை பாதிப்பு காரணமாக மதுரை திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!