கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஒசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பூக்கள் வருகிறது. தற்போது விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்தநாள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது. அதன்படி ஒரு கிலோ மல்லி ₹250க்கும், ஐஸ் மல்லி ₹200க்கும், காட்டு மல்லி ₹150க்கும் முல்லை, ஜாதிமல்லி, கனகாம்பரம் ஆகியவவை ₹300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி பூ ₹80க்கும், சாமந்தி ₹100க்கும் சம்பங்கி, பன்னீர்ரோஸ் ₹30க்கும், சாக்லேட் ரோஸ் ₹40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு