கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது : ராமதாஸ்

கோவை: கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் சமூகவலைத்தள பக்கத்தில், கோவை மாவட்டம் வடசித்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் மார்பளவு சிலை மீது சிலர் மாட்டுச் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தவும் போராடிய தலைவரின் சிலையை இவ்வாறு அவமதிப்பது கண்டிக்கத்தக்கது.

பொது அமைதியையும், சட்டம் – ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்