கோத்தகிரி அருகே முதியவர் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலி

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள வெஸ்ட்புரூக் பகுதியை சேர்ந்தவர் பாலன் (எ) விஜயன் (57). இவர் வெஸ்ட்புரூக் பகுதியில் ஒளி, ஒலி சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்துள்ளார். நேற்று மதியம் பஜார் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று விட்டு மது அருந்திய நிலையில், தனது கிராமமான வெஸ்ட்புரூக் பகுதிக்கு செல்ல கோத்தகிரி குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டபுள் போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அமர்ந்த நிலையிலேயே பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து கீழே உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதில் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உடனே, அருகே இருந்தவர்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்ககு தகவல் அளித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோத்தகிரி போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது