பள்ளி அருகே கூல் லிப் விற்க தடை விதிக்க ஆணை

மதுரை : பள்ளி அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா, கூல் லிப் போன்ற பொருட்களை தடை செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும் புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!