கொல்கத்தா பெண் டாக்டர் படுகொலை: 42 நாள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர் மருத்துவர்கள்: கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு 7 நாள் கெடு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், வழக்கில் தொடர்புடைய உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 42 நாட்களாக வேலைகளை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் நேற்று போராட்டத்தை கைவிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் பணிகளுக்கு திரும்பினார்கள். பகுதியளவு மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய மருத்துவசேவைகள் மட்டுமே வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் பகுதியளவு பணியை மட்டுமே தொடங்கியுள்ளதாகவும், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதற்கு இன்னும் 7 நாட்கள் காத்திருப்பதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்

இலங்கை அதிபர் தேர்தல்; அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!