சென்னை கொளத்தூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை கொளத்தூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சென்னை கொளத்தூர் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை பூர்விகமாக கொண்டவர். இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கீர்த்தி சபரீஷ்கர் என்ற (10)வயது ஆண்குழந்தை உள்ளது.

சிறப்பு குழந்தையாக வளர்ந்து வரும் இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் குளம் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நீச்சல் குள பயிற்சி மையத்தில் வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் வழக்கம் போல் சிறுவனின் தந்தையும், தாயும் சிறுவனை அழைத்து கொண்டு நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்றனர்.

அங்கு நீச்சல் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக சிறுவனை அங்குள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் நீச்சல் பயிற்சி அளித்து வந்துள்ளார். சிறுவனின் தந்தை நீச்சல் பயிற்சி மையத்தின் அருகில் அலுவலக நிமித்தமாக காரில் அமர்ந்து அலுவல் பணிகளை செய்து கொண்டிருந்துள்ளார். தாய் ராணி சிறுவனின் அருகில் இருந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் தனது பிள்ளையை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நீச்சல் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் சிறுவன் நீரில் தத்தளித்துக்கொண்டு மூழ்கியபடி இருப்பதாய் கண்ட தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக பயிற்சியாளரிடம் தாயார் மகன் நீரில் மூழ்குகிறான் என்று கூறியுள்ளார். அதற்கு பயிற்சியாளர் இப்படி இருந்தால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவன் தானாக நீச்சல் பழகி மேலே வருவான் என கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் கீர்த்தி சபரீஷ்கர் நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்தபடி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தயார் ராணி அலறி அடித்தபடி ஓடி வந்து தனது கணவரிடம் விவரத்தை கூறினார்.

இதனை அடுத்து சிறுவனின் தந்தையும், தாயும் உடனடியாக சிறுவனை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்த விட்டதாக கூறியுள்ளனர். இதனால் பெற்றோர்கள் சம்மந்தப்பட்ட நீச்சல் மையத்திற்கு வந்தனர். நடந்த விவரத்தை நீச்சல் பயிற்சி மேலாளர், பயிற்சியாளரிடம் மகனை சாகடித்துவிட்டேர்களே என்று கூறி கதறி அழுதனர். தகவல் அறிந்த வந்த கொளத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு