பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் கோகோ காஃப் – கரோலினா முச்சோவா (செக்.) இன்று மோதுகின்றனர். அரையிறுதியில் உள்ளூர் நட்சத்திரம் கிங்வென் ஸெங்குடன் (21 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய கரோலினா முச்சோவா (28 வயது, 49வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா (26 வயது, 19வது ரேங்க்) உடன் மோதிய கோகோ காஃப் (20 வயது, 6வது ரேங்க்) 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 20 நிமிடம் போராடி வென்றார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் கோகோ – முச்சோவா இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

 

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்