கோயில் நகை விவரங்கள் குறித்து நாகர்கோவில் நீதிபதி ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல்..!!

மதுரை: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகை விவரங்கள் குறித்து நாகர்கோவில் நீதிபதி ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தார். திருவட்டாறு பகுதியை சேர்ந்த தங்கப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கோயிலின் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், தங்க நகைகளை மீண்டும் பழைய இடத்தில் வைக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள், சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதம் வைத்த வழக்கறிஞர் கோயில் நகைகள், பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட நகைகள் குறித்து விவரம் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் விரிவான விசாரணைக்காக ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related posts

ஐசிசியின் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தல்!

பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்

லெபனானுக்கு ரஷ்யா ஆதரவு.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் மிரட்டல்!!