கொடுமுடியில் சிவாச்சாரியார் நூற்றாண்டு விழா

கொடுமுடி, ஏப். 17:குலபதி அல்லூர் குருநாதர் விஸ்வநாத சிவாச்சாரியார் நூற்றாண்டு விழா கொடுமுடியில் நேற்று நடைபெற்றது. இந்த ஸதாப்தி மஹோத்சவத்தின் தொடர் கொண்டாட்டத்தின் இரண்டாவது சதஸ்,கொடுமுடி தண்டபாணி மாணிக்க நாயக குருசாமிகள் தலைமையில் நடைபெற்றது. திருச்செங்கோடு ராஜப்பா குருக்கள் வரவேற்றார். குலபதி அல்லூர் குருநாதர் விஸ்வநாத சிவாச்சாரியார் திருஉருவப்பட திருவீதி உலா மாரியம்மன் கோவிலில் தொடங்கி வடக்கு தெரு, கடைவீதி, மணிக்கூண்டு, காவேரி ரோடு மற்றும் மகுடேஸ்வரர் கோயில் வரை நடைபெற்றது.

இதில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவாச்சாரியார்கள்,1985-ம் வருட மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மஹோத்ஸவ விதி எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காரைக்கால் ஸ்ரீமத் ஸ்ரீகண்ட சிவாசார்ய வேதசிவகாம வித்யாபீட முதல்வர் டாக்டர். சிவ ஸ்ரீ பால ஸர்வேச்வர குருக்கள் சொற்பொழிவாற்றினார். அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முடிவில் பிரபு குருக்கள் நன்றி கூறினார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்