கொடநாடு வழக்கு தற்கொலை செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் குடும்பத்தினரிடம் விசாரணை

கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷின், கோத்தகிரி அருகே கெங்கரையில் உள்ள வீட்டுக்கு சிபிசிஐடி டிஎஸ்பி அண்ணாதுரை நேற்று சென்று அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தின்போது பல்வேறு தொலை தொடர்வு உரையாடல்கள் நடைபெற்று உள்ளது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்துள்ளார். எனவே அவரது செல்போனுக்கு வந்த உரையாடல்கள் குறித்தும், அந்த செல்போன் எண் மற்றும் செல்போன் தற்போது எங்கு உள்ளது? என்பது குறித்தும் தினேஷ் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்ததாக தெரிகிறது.

Related posts

மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!