கோடநாடு வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி மனு

சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மனுவை தாக்கல் செய்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மானநஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கோரி பழனிசாமி தொடுத்த வழக்கு சாட்சிய பதிவுக்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மனுவை தாக்கல் செய்தார். மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். அதில்; எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் பாதுகாப்பு, மற்ற வழக்காடிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் ஆஜராக இயலாது.

நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை; சட்டநடைமுறைகளை பின்பற்ற தயார். தனது வீட்டில் இருந்து சாட்சியம் அளிக்கும் வகையில் வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். எடப்பாடி மனு குறித்து மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் பதில்தர உத்தரவிட்டு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி