கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி சேகரித்த 9 பொருள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொண்டு சிபிசிஐடி போலீசார் சேகரித்த 9 பொருள்கள், ஊட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 6 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது, சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ெகாடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை நடந்த இடம், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கும் அறைகள் ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்து பல்வேறு தடயங்களையும் சேகரித்துள்ளனர். மேலும், பல்வேறு புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து 9 வகையான பொருள்களை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கின் முக்கிய தடயங்களாக கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள், நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

Related posts

பழைய சட்டங்களின் காப்பிதான் 3 புதிய சட்டங்கள்: ப.சிதம்பரம் பேச்சு

திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் சம்பவம் வேதனை அளிக்கிறது: வீடியோ வெளியிட்ட போலே பாபா சாமியார்