கொடைக்கானலில் ஜில் ஜில் சாரல்… குளு குளு சூழல்: சுற்றுலாப்பயணிகள் கொண்டாட்டம்

கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் நேற்று அதிகளவில் குவிந்தனர். மிதமான சாரல் மழைக்கு இடையே இயற்கையின் அழகை பார்த்து ரசித்தனர்.`மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் வார இறுதி நாட்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் முக்கிய சுற்றுலா தலங்களான நட்சத்திர ஏரி, பிரையன்ட் பூங்கா, மோயர் பாயின்ட், பைன் மர காடுகள், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, தூண் பாறை ஆகிய இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. நேற்று மாலை சாரல் மழை பெய்ததால் கொடைக்கானலில் இதமான சூழல் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடி இயற்கை எழில்மிகுந்த அழகை ரசித்தனர். தூண்பாறை, குணா குகை ஆகிய இடங்களில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. கொடைக்கானல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு