கொடைக்கானல் கனமழை வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானல் : கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சூழல் நிலவி வந்தது. நேற்று மதியம் 2 மணி முதல் கொடைக்கானலில் கனமழை பெய்ய துவங்கியது. சுமார் இரண்டரை மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக வெள்ளி நீர் வீழ்ச்சியில் மண் கலந்து சிவப்பு நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் கனமழை காரணமாக கொடைக்கானலில் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டும், சுற்றுலா தலங்களை காண முடியாமலும் சுற்றுலாப்பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

நட்சத்திர ஏரி ‘ஃபுல்’

கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரால் கொடைக்கானல் மலைப்பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related posts

தேசிய விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம்!

ரூ.9.75கோடி கையாடல்: அதிமுக நிர்வாகி போலீசில் சரண்

மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில்பாலாஜி எச்சரிக்கை..!!