கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் ஒற்றை காட்டுயானை அட்டகாசம்: கிராம மக்கள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் ஒற்றை காட்டுயானை அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதனருகில் உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இப்பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விளைபொருட்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ரூ.பல லட்சம் கடனாக பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும், விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுவது தொடர்கிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் ஒற்றை காட்டுயானை புகுந்தது. அப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்த அந்த யானை விளைபொருட்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை நுழைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

உத்தரபிரதேச மாநில தோல்விக்கு மோடி, யோகியை குறை சொல்லாதீங்க!: அகங்காரம் கூடாது என மாஜி முதல்வர் அறிவுரை

மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி சேனல் நிருபர் மர்ம மரணம்?: பிரியங்கா காந்தி கண்டனம்

ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை ஆனதால் ஜார்கண்ட் முதல்வர் பதவி விலக முடிவு?: ஆளுநர் உதவியுடன் சட்ட சிக்கலை உருவாக்க பாஜக திட்டம்