கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் மழைக்கு: ராட்சத மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் இன்று காலை சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு ராட்சத மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பூம்பாறையை அடுத்து கூக்கால் கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை காற்றுடன் பெய்த மழைக்கு, கூக்கால் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் இருந்த ராட்சத மரம் வேருடன் சாய்ந்தது.

இதனால், கிராமங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாய்ந்த மரத்தின் கிளைகள் மோதியதில் 3 மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இதனால் கூக்கால், குண்டுபட்டி, காலனி, பழம்புத்தூர் மற்றும் புதுப்புத்தூர் ஆகிய கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியிலும், கூக்கால் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது