கொடைக்கானல் அருகே நில அதிர்வு?.. கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேல்மலையில் உள்ள கடைசி கிராமமான கீழ் கிளாவரை பகுதிக்கு செருப்பன் ஓடையிலிருந்து குழாய் மூலம் நீர் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால் கீழ் கிளாவரை பகுதியிலிருந்து சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தனர். கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்துக்கு மேல் நிலம் தனியாக பிளந்து இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் அருகே 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு சோகம் இன்னும் அகலாத நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள்; தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு காரணத்தை தெரியப்படுத்த வேண்டும் என்றும், ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டால், தங்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும்மேலும் மேலும் குடிதண்ணீர் மற்றும் வயல்வெளிகளுக்கு பாய்ச்சும் நீர் இந்த பகுதியில் இருந்து மட்டுமே வருவதாகவும், விரைந்து வந்து இப்பகுதியை ஆய்வு செய்து தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Related posts

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையோர கடைகள் அதிரடி அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு