கொடைக்கானல் நிலப்பிளவு: ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமம் கிளாவரை அருகே வந்தரவு வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன் திடீரென 85 மீட்டர் தூரத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டது. இதனால் கேரள மாநிலம் வயநாட்டை போல நிலச்சரிவு ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வக அதிகாரிகள் விவேக் சிங் மற்றும் குன்குளோ ஆகியோர் நேற்று முன்தினம் நிலப்பிளவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் டேப் மூலம் நிலப்பிளவின் நீளம், அகலத்தை அளவீடு செய்தனர். அங்கு நிலப்பிளவு ஏற்பட்டது எப்படி, இதனால் ஏற்படும் பின் விளைவுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘நிலப்பிளவு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’’ என்றனர். ஆய்வின்போது வனத்துறையினர், வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.

Related posts

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக நாற்று பறித்து நடும் பணி தீவிரம்

படிகளில் தொங்கியவாறு தினமும் பள்ளிக்கு செல்கின்றனர் மாணவர்களுக்கென்று அரசு தனி பஸ் இயக்குமா

₹60 லட்சம் செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு 3,712 புகார்களில் ₹35.18 கோடி இழப்பு ₹8.81 கோடி உடனடியாக மீட்பு