கொடைக்கானல் எப்போதும் ‘ஹவுஸ் ஃபுல்’ சுற்றுலாப்பயணிகள் வருகை மூன்று மடங்கு அதிகரிப்பு-கடந்த ஆண்டை விட கூடுதலாக 4 லட்சம் பேர் குவிந்தனர்

கொடைக்கானல் : கொடைக்கானலுக்கு கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகள் வருகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுலாத்தலம், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. தற்போது கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இந்த (2023) ஏப்ரல் வரை சுமார் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை வைத்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பயணிகள் வருகை விபரம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பது குறித்து பூங்க நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. கூடுதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு