கொடைக்கானலில் மலை கிராமத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட புலி: சிகிச்சைக்கு பிறகு வனத்திற்குள் விடுவித்த வனத்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்கு வனத்துறையினர் சிகிச்சைஅளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். கொடைக்கானல் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மஞ்சம்பட்டி அருகே கழுத்தில் கயிறு மற்றும் காயங்களுடன் புலி ஒன்று சுற்றி திரிவது போன்ற புகைப்படம் வனத்துறையினர் கவனத்திற்கு வந்தது.

இதனை அடுத்து அந்த பகுதியில் விவசாயிகளுக்கு புலி நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர். அதன் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்தனர். அதன் பயனாக கடந்த சனிக்கிழமை அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் புலி சிக்கியது. இதனை அடுத்து புலியின் உடலில் காயங்கள் இருப்பது உறுதியாகவே அதற்கு மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்த வனத்துறையினர். மீண்டும் ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு சென்று புளியை விடுவித்தனர்.

Related posts

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து