கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக மின்சார ரயில்கள் நாளை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக மின்சார ரயில்கள் நாளை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்து பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் வரும் வார நாட்களில் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த (ரயில் எண் 40201, 40203, 40205, 40207, 40137) இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை முதல் கூடுவாஞ்சேரி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரி- தாம்பரம் இடையே (ரயில் எண் 40202, 40204, 40206, 40208, 40210) இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே (ரயில் எண் 40251, 40253, 40255, 40257, 40259) இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை முதல் கூடுவாஞ்சேரி நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரி- தாம்பரம் இடையே (ரயில் எண் 40252, 40254, 40256, 40258, 40260) இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு