கிச்சன் டிப்ஸ்

* ரசத்தில் புளிப்புச் சுவை குறைந்திருந்தால் சிறிதளவு மாங்காய்ப் பொடி சேர்த்துக் கிளறினால் புளிப்புச் சுவை சரியாகிவிடும்.
* குருமா வைக்கும்போது காரம் கூடினால், சிறிதளவு வெண்ணெய்விட்டு கொதிக்கவிட்டு இறக்கலாம்.
* சாம்பார், வத்தக்குழம்புகளில் காரம் கூடிவிட்டால் நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி விட்டு கொதிக்க விட்டால் சமனாகும்.
* பாயசம் நீர்த்துவிட்டால் 2 தேக் கரண்டி சோளமாவு கரைத்துவிட்டு கொதிக்கவிட்டால் கெட்டிப்படும்.
* ரசம், குழம்பில் புளி அதிகமாகிவிட்டால், சின்ன கட்டி வெல்லம் சேர்த்தால், புளிப்பு குறைவதோடு, இரும்புச்சத்தும் கூடும்.
* தயிர்பச்சடி நீர்த்துப் போய்விட்டால், சிறிது வேர்க்கடலையை வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். சுவையை கூட்டுவதோடு உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும்.
* இட்லிப்பொடி அரைக்கும்போது, சீரகம், மல்லிவிதையை வறுத்து சேர்த்து அரைத்தால் வாசனையாகவும் எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் இருக்கும்.
* பருப்புரசம் தாளிக்கும்போது ஒரு கொத்து முருங்கைக் கீரையையும் சேர்த்து தாளித்தால் சத்தும் கூடும். ரசத்தின் வாசமும், சுவையும் அதிகரிக்கும்.
* தேங்காய்த் துருவலுடன் ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையைச் சேர்த்தால், பர்பி வித்தியாச சுவையுடன் அசத்தும்.
* அடை, பக்கோடா செய்யும்போது, மல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றையும் பொடியாக நறுக்கி சேருங்கள். மணமும், ருசியும் செரிமானமும் சீராக இருக்கும்.- இந்திராணி தங்கவேல்.
* பால் கொதிக்கும்போது ஏலக்காயைத் தட்டிப் போட்டால் நீண்ட நேரத்திற்குப் பால் புளிக்காமல் இருக்கும்.
* முள்ளங்கிச் சாம்பார் செய்யும்போது, சிறிது எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பிறகு சாம்பார் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.
* மிளகாய் வறுத்துப் பொடி செய்யும்போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், கமறாமல் இருப்பதோடு பொடியும் மணமாக இருக்கும்.
* உறை ஊற்ற தயிர் கிடைக்காதபோது 4 காய்ந்த மிளகாய்க் காம்புகளை பாலில் போட்டு வைத்தால் அடுத்தநாள் பால் தயிராகும்.
* இனிப்புப் பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன்மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.- அண்ணா அன்பழகன்.
* மாக்கோலம் போட அரிசிமாவு கரைக்கும்போது சிறிது மைதா மாவு கலந்து கோலம் போட்டால் அழகாகவும் இருக்கும். அழியாமலும் இருக்கும்.
* பிஸ்கட் வைக்கும் டின்னில் சிறிதளவு மிளகைப் போட்டு வைத்தால் பிஸ்கட் மொரமொரப்பாக இருக்கும்.
* நான்கு ஆழாக்கு பச்சரிசிக்கு ஒரு ஆழாக்கு உளுந்தம் பருப்பு சேர்த்து அரைத்து, பிறகு உப்பு, சீரகம் கலந்து பிசைந்து தேன்குழல் செய்தால் சூப்பராக இருக்கும்.
* நான்கு தேக்கரண்டி கசகசா, 25 ஏலக்காய், சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றை பொடித்து வைத்துக் கொண்டு பாயசம், இனிப்பு வகைகள் செய்யும்போது தூவினால் மணமும், ருசியும் கூடுதலாக இருக்கும்.
* எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை, எடுத்தவுடன் டப்பாவில் போட்டு மூடிவிடக் கூடாது. நமத்துப் போய்விடும்.
* அலமாரித் தட்டுகளில் பேப்பரைப் போட்டு அதன் ஓரங்களை டேப்பினால் ஒட்டிவிட்டால் பேப்பர் நகர்ந்து போகாமல் இருக்கும். – எம்.ஏ. நிவேதா.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு