கிச்சன் டிப்ஸ்

* மோர்க்குழம்பு செய்யும்போது சில அன்னாசிப் பழத்துண்டுகளைச் சேர்த்துப் பாருங்கள். சுவை அதிகரிக்கும்.
* எந்த விதமான பருப்பு வடை செய்யும்போதும் சிறிதளவு இஞ்சித்துருவலைச் சேர்த்து செய்தால் வாயு அகலும். எளிதில் ஜீரணிக்கும். சுவை கூடும்.
* நெய் காய்ச்சிய பாத்திரத்தில் தேங்காய், பால், சர்க்கரை சேர்த்து பர்பி செய்து அசத்தலாம்.
* அடைமாவில், கீரை, காய்கறி வகை களைச் சேர்த்து செய்ய கமகம சத்தான அடை சாத்தியமாகும்.
* கத்தரிக்காய் காம்புகளைக் கழுவி, ரசம், சாம்பாரில் போடலாம். சுவை அசத்தும்.
* ரசம் மிகுதியாக இருந்தால் துவரம் பருப்பை வேகவைத்து கடைந்து சேர்த்துவிட்டால் ஸ்பெஷல் சாம்பார் ஆகிவிடும்.
* கடலைப்பருப்பை லேசாக வறுத்து, வேகவைத்து அரைத்து வெல்லம், திராட்சை, முந்திரி, ஏலத்தூள் போட்டு பாயசம் செய்தால் சூப்பராக இருக்கும்.
* மக்காச்சோள ரவை ஒரு பங்குக்கு அரைப் பங்கு உளுந்தம் பருப்பை ஊற வைத்து நன்றாக அரைத்து புளிக்க வைத்து இட்லி வார்த்து சாப்பிடலாம்.
* மோர்க்குழம்பை இறக்கியதும் சிறிது வெண்ணெய் கலந்தால், கெட்டியாகவும், வாசனையுடனும் இருக்கும்.
* சேமியா உப்புமா செய்யும்போது பாதியளவு நீரும், பாதி தேங்காய்ப் பாலும் கலந்து செய்தால் உப்புமா ருசியாக இருக்கும்.
* ஐஸ்கட்டி ட்ரேயில் முதலில் சுடு தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு பிறகு நீர் ஊற்றி வைத்தால் ஐஸ் எடுப்பது சுலபம்.
* சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் சேர்த்தால் இனிப்புகள் கூடுதல் ருசியாக இருக்கும்.
* சப்பாத்தி மாவில் மல்லித்தழை, மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்து பிசைந்து செய்தால் ருசி அசத்தும்.
* பிரியாணி உதிர்உதிராக வர சோற்றைத் தனியாக வடித்து கிரேவியுடன் கலக்கவும்.
* முறுக்கு டப்பாவில் அடியில் தூளாகி இருக்கும் முறுக்குத் தூளை பொரியலில் கலந்து இறக்கினால் வித்தியாசமான புதிய சுவையில் இருக்கும்.
* புளியின் மீது கல் உப்பைத் தூவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு புளி கெடாமல் இருக்கும். – இந்திராணி தங்கவேல்.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை