கிச்சன் டிப்ஸ்

* சமையலில் காரம் கூடிவிட்டால் எலுமிச்சைச்சாறு சிறிது பிழிந்து விட்டால் காரம் மட்டுப்படும்.
* பிளாஸ்கில் சிறிது சர்க்கரையும் மிளகுத்தூளும் போட்டு வைத்தால்புழுக்களும், வாடையும் வராது.
* ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
* புதினா நிறைய இருந்தால், இலைகளை உதிர்த்து வெயிலில் காயவைத்து கொண்டால் எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசனையுடன் இருக்கும்.
* கறிவேப்பிலை, மல்லித்தழையை சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும்.
* நறுக்கிய ஆப்பிளை உப்பு கரைத்த தண்ணீரில் போட்டு வைத்தால் நீண்ட நேரம் கருக்காமல் இருக்கும்.
* வெஜிடபிள் கட்லெட் செய்யும்போது சிறிது தேங்காய் பொடி சேர்த்தால் சுவை கூடும்.
* தேயிலையைக் குளிர்ந்த நீரில் சில நிமிடம் ஊறவைத்து, பிறகு டீ போட்டால் ருசியும் மணமும் தூக்கும்.
* புளிக்குப் பதில் தக்காளிப் பழங்களை போட்டு காரக்கழம்பு வைத்தால் ரொம்ப ருசியாக இருக்கும்.
* கேசரி வகைகளில் பாதாம், முந்திரிகளைப் பொடித்துப் போட்டு கிளறினால் வாசமும், ருசியும் கூடி சீக்கிரம் காலியாகிவிடும்.
* கறிவேப்பிலையை இலை இலையாக ஆய்ந்து கவரில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.
* தேங்காயைத் துருவி டப்பாவில் வைத்துக் கொண்டால் வீணாகாமலும் இருக்கும். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்க எளிதாகவும் இருக்கும்.
* பூசணி, பரங்கிக்காய்களில் உள்ள விதைகளை நீக்கி, தோலையும் நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கி டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.
* முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டின் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.
* சப்பாத்தி மாவுடன் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித் தழையைப் போட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால் பார்க்க அழகாகவும் சத்தாகவும்இருக்கும்.
* ரவா லட்டு, பொட்டுக்கடலை லட்டு செய்யும்போது மொத்தமாவு அளவில் கால்பங்கு பசும்பால் கலந்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* கேழ்வரகை ஊறவைத்து, அரைத்து பால் எடுத்து அல்வா தயாரித்தால், கோதுமை அல்வா போன்றுசுவையாக இருக்கும்.
* இட்லி மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைக்கும்போது, பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் பொங்கி வழியாது.- இந்திராணி தங்கவேல்.
* எந்த வகை கேசரி செய்தாலும் மூன்று தேக்கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு தேக்கரண்டி ஓமம் கலந்து செய்யலாம். சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.
* ரவா இட்லி செய்யும்போது சிறிது சேமியாவை வறுத்து, தயிரில் ஊறவைத்துச் சேர்த்தால் கூடுதல் ருசி தரும்.
* ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லையென்றால் சிறிதளவு முருங்கை இலைகளைத் தூவி இறக்க, அது தனிச்சுவையைத் தரும்.– எம்.நிர்மலா.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு