கிச்சன் டிப்ஸ்

அரிசி குருணை உப்புமா செய்பவர்கள் சம அளவிற்கு சேமியாவை வறுத்து குருணை பாதி வெந்ததும். சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, அரை மூடி எலுமிச்சை பிழிந்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் கூடிய உப்புமா தயார்.கிரேவி வகைகள் சமைக்கும்போது கொஞ்சம் வேர்க்கடலையை தோல் உரித்து 20 நிமிடம் ஊறவைத்து நைசாக அரைத்து சேர்த்துப் பாருங்கள். ரிச்சான, செம டேஸ்டியான கிரேவி தயார்.பெருங்காயத்தை உடைப்பதற்கு கஷ்டமாக இருந்தால் இரும்பு வாணலியில் கொஞ்சநேரம் வைத்தால் இளக ஆரம்பிக்கும். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து தனித்தனியாக பிரித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளலாம். சமைக்கும்பொழுது பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.– பா.பரத்.

புளிக்குழம்பு வைக்கும்போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.இறைச்சியை வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் சேர்த்து வேக வைக்கக்கூடாது. ஏனென்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் மனமும் போய்விடும்.ரவா உப்புமா அதிகமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.கொழுக்கட்டை மாவு பிசையும்போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை செய்தால் விரிந்து போகாமல் இருக்கும்.தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவிவிட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கறையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கிவிடும்.மழைக்காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.இடியாப்பம் செய்து மீந்துவிட்டால் அதனை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையானபோது வறுத்து சாப்பிடலாம்.பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் போட்டுவைத்தால் அதன் கசப்பு போய்விடும்.– கவிதா பாலாஜி.

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றை சேர்த்து பொடியாக்கி வைத்து, குழம்பு, ரசம் ஆகியவற்றில் போட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும். கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால்தான், சத்து அதிகமாக இருக்கும்.கொத்துமல்லித் தழையை பச்சையாகவே துவையல் அரைக்கும்போது, புளி சேர்ப்பதற்கு பதிலாக, ஒரு துண்டு மாங்காயை சேர்த்து அரைத்தால், சுவையும், மணமும் அதிகமாகும்.சூடான எண்ணெயில் சிறிதளவு மைதாமாவு சேர்த்தபிறகு, எதைப் பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.கருணைக்கிழங்கை வேகவைக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்து வேகவைத்தால் வெகு சீக்கிரம் பஞ்சுபோல் வெந்துவிடும்.துவரம்பருப்பை வேகவைக்கும்போது சிறிய தேங்காய்த் துண்டை நறுக்கிப்போட்டால் பருப்பு, விரைவில் வெந்து, பக்குவமாக இருக்கும்.இட்லி மிளகாய்ப்பொடியுடன் புளி, கறிவேப்பிலை, பொரித்த அப்பளத் துண்டுகளைச் சேர்த்து அரைக்க, திடீர் சுவைமிகு துவையல் ரெடி.தேங்காய்ச் சட்னி அரைக்கும்போது புளிக்குப் பதிலாக சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்தால் சுவை கூடும். உடலுக்கும் நல்லது.கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலைமாவைத் தூவினால் சுவை கூடுதலாக இருக்கும்.கூட்டு செய்யும்போது தேங்காய்க்குப் பதில் பொட்டுக்கடலை, சீரகம், பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.கட்லெட் செய்ய உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கட்லெட் நல்ல ருசியாக இருக்கும்.பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்து விட்டுச் செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.புட்டு செய்யும்போது பச்சை வாசம் வராமல் இருக்க, புட்டுக்கு அரிசியை ஊற வைக்கும் முன்பு வாணலியில் லேசாக வறுத்து ஊற வைக்கவும். அல்லது புட்டுக்கு அரைத்தமாவை வாணலியி்ல் வறுத்து வேக வைக்கவும்.ஜாம், ஊறுகாய், நெய் பாட்டிலின் மூடி டைட்டாக திறக்க முடியாதபடி இருந்தால், மூடியின் விளிம்பில் ஒரு ரப்பர் பாண்டைப் போட்டுவிட்டு, பிறகு திறந்தால் சுலபமாக திறக்க வரும்.
இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்