கிச்சன் டிப்ஸ்

* பிரெட் சாண்ட்விச் செய்யும்போது, பிரெட் துண்டில் வெண்ணெய் பூசுகையில், வெண்ணெயுடன் சிறிது பால் கலந்து பூசினால், பிரெட் முழுவதும் வெண்ணெய் பரவி, ருசி கூடுதலாகும்.
* வெனிலா எசென்ஸ் சில துளிகளை ஈரத்துணியில் தொட்டு பிரிட்ஜ் உட்பக்கம் துடைத்தால் பழைய பொருட்களின் வாடை நீங்கிவிடும்.
*பாலிதீன் பையில் பழுக்காத தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியை போட்டு வைத்தால் எல்லா தக்காளிகளும் பழுத்துவிடும்.
* வதங்கிய காய்கறிகளை எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் பத்துநிமிடங்கள் போட்டு எடுத்தால் பளிச்சென புது காய்கறி போல இருக்கும்.
* பாலை சுண்டக் காய்ச்ச கொதித்து வரும்போது கசகசாவை சிறிது சேர்த்தால் பால் கெட்டியாகும். அதிக நேரம் காய்ச்ச வேண்டியதில்லை.- மல்லிகா அன்பழகன்.
*கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொரியல் செய்யும்போது, கடலைப் பருப்பை வேகவைத்து கடைந்து வதக்கி கிழங்கு வறுவலுடன் சேர்த்தால் பொரியல் சுவையாக இருக்கும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை பிரிட்ஜில் வைத்து பிறகு கேக்கில் கலந்து செய்தால் கேக் மெத்தென்று இருக்கும்.
* பகளாபாத் சாதம் தயாரிக்க ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் கலந்து வேகவைத்தால் சாதம் நன்கு குழைந்து, சுவையும் கூடுதலாக இருக்கும்.
*நூடுல்ஸ் வேகவைத்த தண்ணீரில் துணிகளை நனைத்து காயவைத்தால் கஞ்சி போட்டது போல் விறைப்பாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது, முதலில் வாணலியில் சிறிது சர்க்கரையை எண்ணெய்விட்டு பழுப்பு நிறமாகும் வரை வறுத்து, பிறகு கடுகு போன்றவற்றை தாளித்து கறி செய்தால் உருளைக்கிழங்கு முழுவதும் ஒரே சீராக சிவப்பு நிறத்துடன் இருக்கும்.
*குக்கரின் உட்பக்கம் கறுப்பாகி விட்டால், புளித்த மோரை ஊற்றி இரண்டு, மூன்று நாட்கள் வைத்திருந்து தேய்த்து கழுவினால், பளபளப்பாகும்.
*புடலங்காய் நிறைய மீந்துவிட்டால், வட்டமாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு பிழிந்து நீரை எடுத்துவிட்டு, பஜ்ஜிமாவு தயாரித்து அதில் முக்கி, பஜ்ஜியாக பொரித்தால் சுவையான புடலங்காய் பஜ்ஜி தயார்.
*உருளை, பட்டாணி கறிக்கு மசாலாவுடன் லவங்கம், சோம்பு சேர்த்து அரைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி சேர்த்தால் நல்ல ருசியாக இருக்கும்.
*வடைக்கு உளுத்தம் பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் ஒரு ஸ்பூன் நெய்விட்டால் மாவு இறுகிவிடும்.
– அ.யாழினிபர்வதம்.
*தோசைமாவில் சிறிது ஜவ்வரிசியை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து கலந்து பிறகு தோசை வார்த்துப் பாருங்கள் சுவையான மொறு மொறு தோசை தயார்.
*காரச்சட்னி அரைத்து அதன் மேலே சிறிது நல்லெண்ணெயை ஊற்றினால் காரம் திட்டமாக இருக்கும்.
*சேமியா பாயசம் செய்யும்போது குழைந்துவிட்டால் இரண்டு சொட்டுமட்டும் எலுமிச்சைச்சாறு அதில் கலந்தால் போதும் சேமியா தனித்தனியாகிவிடும்.
*பால்பாயசம் செய்யும்போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடா சேர்த்தால் திரிந்த பால் சரியாகிவிடும்.
– பா. பரத்.

Related posts

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு