கிடாய் வெட்டி ரத்தம் குடித்த பூசாரி சாவு

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணமார் கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது. இதில் கோபி அருகே நல்லகவுண்டன் பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த பூசாரி பழனிச்சாமி (45) பங்கேற்றார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய பரண் கிடாய் பூஜையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும், வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பூசாரி பழனிச்சாமிக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதற்காக மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாகவும், நேற்று மாத்திரை சாப்பிடாமல் பச்சை ரத்தம் குடித்ததால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது