பனகல் அரசர் பிறந்தநாள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை, இடஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களைக் கொண்டு வந்து திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று. அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம். திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம். என்று பதிவிட்டுள்ளார்.

 

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்