கைனடிக் இலூனா

கைனடிக் நிறுவனத்தின் லூனா மொபெட் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானது. நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் இது அதிகமாக விற்பனையானது. இந்நிலையில், புதிய அவதாரத்தில் இந்த லூனா மீண்டும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. கிரீன் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் இ-லூனாவை சந்தைப்படுத்தியுள்ளது. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ₹69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதியே இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டது. நகர மற்றும் ஊரக சந்தையை கவரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டுக்குள் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மொபெட்டில் 2.2 கிலோவாட் பிஎல்டிசி மோட்டார் மற்றும் 2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 110 கி.மீ தூரம் வரை செல்லலாம. அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ வேகம் வரை செல்லும். இதுதவிர பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு எனவும், 4 மணி நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்யலாம் எனவும் நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர 1.7 கிலோவாட் அவர் மற்றும் 3.0 கிலோவாட் அவர் என குறைந்த மற்றும் அதிக பேட்டரி திறனுடன் புதிய வேரியண்ட் சந்தைப்படுத்தப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டள்ளது. 16 அங்குல வீல்கள், கோம்பி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 5 வண்ணங்களில் கிடைக்கும்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.