கிண்டி சிறுவர் பூங்கா மறுவடிவமைப்பு ரூ.20 கோடியில் இயற்கை பூங்கா பணி: அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவை மறுவடிவமைத்து, குழந்தைகளுக்கான இயற்கை பூங்கா அமைக்கும் பணி, ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதனை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கொட்டிவாக்கத்தில் 2.50 ஏக்கர் நிலத்தில் வனத்துறை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். வனத்துறை செயலாளர் செந்தில்குமார், வனத்துறை தலைவர் சுதான்ஷூ குப்தா, வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி, மண்டல தலைமை வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி உடன் இருந்தனர்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்