கேரளாவில் காட்டு யானை மிதித்து மேலும் ஒருவர் பலி: இன்று முழு அடைப்பு போராட்டம்: ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்த பரிதாபம்

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் நேற்று காட்டு யானை மிதித்து மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. கடந்த 10ம் தேதி மானந்தவாடி அருகே உள்ள படமலை பகுதியைச் சேர்ந்த அஜீஷ் என்பவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது . இந்நிலையில் நேற்று காலை மானந்தவாடி அருகே மேலும் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பால் (55). இவர் அருகிலுள்ள சுற்றுலா மைய ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை 9.30 மணியளவில் இவர் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். செறியமலை சந்திப்பு அருகே திடீரென அங்கு வந்த ஒரு காட்டு யானை பாலை தாக்கியது. கோழிக்கோடு அரசு மருத்துவமனை யில் பால் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே வாரத்தில் 2 பேர் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் வயநாடு மாவட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி