ஷ்ரம்ஜீவி ரயிலில் குண்டுவெடித்து 14 பேர் பலி 2 பேர் குற்றவாளிகள்: ஜன.5ல் தண்டனை அறிவிப்பு

ஜான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி ஜான்பூர் ரயில் நிலையம் அருகே பாட்னா-புதுடெல்லி செல்லும் ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயரிழந்தனர். மேலும் 62 பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் சூட்கேசுடன் ரயிலில் ஏறியதாகவும், சிறிது நேரத்தில் சூட்கேஸ் இன்றி இரண்டு பேரும் இறங்கிவிட்டதாகவும் சாட்சியங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கு ஜான்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ராஜேஷ் குமார் ராய், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபிகுல் விஸ்வாஸ் மற்றும் ஹிலால் ஆகிய இரண்டு பேரும் குற்றவாளிகள். தண்டனை விவரங்கள் ஜனவரி 5ம் தேதி அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்