கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் நாளை முதல் கிளம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்து இயக்க முடியாது. இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் ஆம்ணி பேருந்துகளில் முன்பதிவு செய்து உள்ளனர். தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு ஏற்கனேவே முன்பதிவு முடிந்து விட்டது. தற்போது திடீரென பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என்றால் என்ன செய்வது. நேற்றிரவு திடீரென அறிவிப்பு வழங்கி 30-ம் தேதிற்குள் காலி செய்யுமாறு கூறினார் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க இயலாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வரதராஜபுரத்தில் தங்களுக்கான தனியாக பார்க்கிங் வசதி தயாராகும் வரை பயணிகளுடன் கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க வேண்டும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் என்று வலியுறுத்தினர்.

ஆனால் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, நாளை முதல் கட்டாயமாக கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மக்களுக்காக தான் அரசு செயல்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார்.

2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் பேருந்து இயக்க முடியாது என்று கூறியுள்ளார். இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து உள்ளனர். முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று எங்களுக்கு தகவல் அளித்தனர். எங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே அரசு முடிவு எடுத்துள்ளது. பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால், செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்